ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!!

 

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!!

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000 மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த வேட்பாளர்களுக்கு 50 சதவீதத் தொகைசெலுத்தினால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!!

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். இதனால் நாளை அதிகளவில் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 24,607, கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6,864,ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,298, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 202 என மொத்தம் 33,971 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.