திருப்பூரிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இன்று காலை முதல் பெய்துவரும் மழையால், பள்ளி, மற்றும் அலுவலகம் செல்வோர் அவதிக்குள்ளாகினர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று திருப்பூர், ஈரோடு மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் டவுன் மற்றும் புறநகர் பகுதிகளான ஆலம்பாடி, திட்டுப்பாறை, நத்தக்காடையூர், முள்ளிப்புரம், மருதுறை, பாரதிபுரம், பழையகோட்டை, குட்டப்பாளையம் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் இன்று காலை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதேபோல் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்த மழையின் காரணமாக சாலைகள் எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 23) அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.


