திடீரென கட்டணம் வசூலிக்காமல் கேட்டை திறந்துவிட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்..! என்னாச்சு..?
தீபாவளி போனஸ் வழங்கப்படாததால் டோல் கேட்டை திறந்துவிட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் அமைந்துள்ள ஃபதேகாபாத் சுங்கச்சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) இச்சம்பவம் நிகழ்ந்தது.
ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போதிய தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதுமானதாக இல்லை, அதை உயர்த்தி தர வேண்டும் என்று நிர்வாகத்திடம் ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஊழியர்களுக்கு ரூ.1,100 மட்டுமே போனஸ் வழங்கப்பட்டதாகக் தெரிகிறது.இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேட்டை மூடாமல் திறந்து விட்டுள்ளனர். கட்டணம் செலுத்தாமலேயே வாகனங்களைச் செல்ல அனுமதித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஊழியர்கள் அங்கேயே அமர்ந்து போராடியதாகவும் போனஸ் வழங்குவதாக உறுதியளித்த பிறகு போராட்டத்தைக் கைவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


