பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! எங்கு தெரியுமா?

 
rain school leave

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது. 

rain

இந்நிலையில்  கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இன்றும் விடுமுறை அளித்து ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.