எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?

 
school

தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

schools

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி, தாழ்வு மண்டலாக வலுப்பெற்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 

school leave

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இரண்டாவது நாளாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.