சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

gold

கொரோனா மற்றும் பொருளாதாரத்தில் மந்தநிலை காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4655 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்படி நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 37,240 ரூபாய்க்கு விற்பனையானது.

gold

இந்நிலையில் சென்னையில்  இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்துள்ளது. இதன் மூலம்  ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.37,048 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ. 24 குறைந்து  ரூ.4,631க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலையும்  இன்று கணிசமாக குறைந்து காணப்படுகிறது. சென்னையில்  இன்று கிராம்  வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.71க்கு விற்பனையாகிறது. இன்றைய விலை நிலவரத்தின்படி வெள்ளி ஒரு கிலோ விலை ரூ. 71 ஆயிரத்திற்கு விற்பனையாகி வருவது கவனிக்கத்தக்கது.