மாணவி வன்கொடுமை - பாஜக மகளிரணி இன்று பேரணி
Jan 3, 2025, 07:50 IST1735870801316
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் நீதிப்பேரணி இன்று நடைபெறவுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் இன்று நீதிபேரணி நடைபெறவுள்ளது. காவல்துறை இப்பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி தலைமையில் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளனர்.