இந்த கோபத்தை முதல்வருக்கு உணர்த்த.. - விவசாயிகள் எடுத்த அதிரடி முடிவு

 
cm

விவசாயிகளின் கோபம் தீவிரமாக இருக்கிறது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

 தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது முதல் விவசாய பணிகளில் விவசாயிகளுக்கான நடைமுறைகளில் தொடர்ந்து வேளாண்துறை பின்னடைவை சந்தித்து வருகிறது என்கிறார் விவசாயிகள் சங்க பி.ஆர். பாண்டியன்.  அவர் மேலும்.   குறிப்பாக கூட்டுறவு கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த பல துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுவதில்  தமிழக அரசாங்கம் மேலாண்மைத் துறை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து இருக்கிறது.  இதனால் தமிழக முதல் அமைச்சர் உடனடியாக தலையிட்டு வேளாண் சார்ந்த பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

prp

 தமிழ்நாட்டில் சாகுபடியில் இருக்கின்ற விளை நிலங்களின் மொத்த பரப்பளவில் 40 சதவிகிதம் காவிரி டெல்டாவில் இருக்கிறது.   நிலப்பரப்பை கொண்டு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கொடுப்பதற்கு கூடுதலாக தர வேண்டும்.   கூட்டுறவு கடன் வழங்குவதில் காவிரி டெல்டாவில் மிகப்பெரிய பின்னடைவு  இருக்கிறது. ஒதுக்கப்பட்ட நிதியில் 10 சதவிகிதம் மட்டுமே காவிரி டெல்டாவில் கடனாக வழங்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மாற்றம் கொண்டு வரவேண்டும்.   ஏற்கனவே அறிவித்த நவம்பர் 23ஆம் தேதி சென்னை கோட்டை முற்றுகை இடும் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தினால்  வருகிற டிசம்பர் 16ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார் . 

தமிழ்நாட்டுக்கு என தனி  காப்பீடு திட்டத்தை தொடங்க வேண்டும்.  டிஏபி,  யூரியா உள்ளிட்ட விலை உயர்வு மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறது.  இதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழக அரசின் மீது விவசாயிகளின் கோபம் தீவிரமாக இருக்கிறது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்.  அதை உணர வைக்கத்தான் முற்றுகை போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்கிறார்.