"இனி ஆதார் கட்டாயம்" - டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களையும் வரவேற்றிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கணிணி வழி தேர்வாக நடத்தப்படுகின்றன. இந்த முறையில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை.

ஆதார் அட்டை தொடர்பான பிரச்சனையை இனி நொடியில் தீர்க்கலாம்! | LIFESTYLE News  in Tamil

அதேபோல தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், தங்களின் ஆதார் விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடத்தப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. தேர்வர்கள் டிசம்பர் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேர் கைது- Dinamani

சரியான விடையை தேர்வு செய்யக்கூடிய ஆப்சன் உள்ள வினாத்தாள்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்படும். விரிவாக பதில் எழுத வேண்டிய தேர்வர்களுக்கு எப்போதும் போல எழுத்துத் தேர்வு நடத்தப்படும். மேலும் துறை தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.