பள்ளியில் பாலியல் தொல்லையா? - இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

 
மாணவி

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியராக இருந்த ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், பல்வேறு பள்ளி மாணவிகளும் தங்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களும் இவ்வாறு தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. 

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது..! 5 பிரிவுகளில்  போலீசார் வழக்கு பதிவு!!!

பள்ளியில் புகார் பெட்டி வைக்க வேண்டும், புகார்களை விசாரிக்க தலைமையாசிரியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட விதிகளை வகுத்து செயல்பாட்டிற்கு வரவிருக்கின்றன. இச்சூழலில் கோவை மாணவி கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் தொந்தரவு அளித்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பத்ம சேஷாத்ரி நமக்கு ஒரு பாடம்.. ஆன்லைன் வகுப்புகளுக்கு வருகிறது புதிய  கைட்லைன்- அன்பில் மகேஷ் உறுதி | Tamil Nadu school education ministry will  come out with news ...

இதனால் அந்த வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, வகுப்பறைகளில் ஒட்டப்படும். மேலும், குழந்தைகள் தங்களின் புகார்களை தெரிவிப்பதற்கான உதவி எண் 14417-ஐ பள்ளித் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். இந்த உதவி எண்ணை பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.