"பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகளை காட்டி கொடுத்தால் வெகுமதி" - அரசு அறிவிப்பு!

 
பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் பைகள் இல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கை நகர்வதே இல்லை. பொருட்களை வாங்கி வருவதிலிருந்து அதைச் சமைத்து பரிமாறுவது, தண்ணீர் குடிப்பது என அனைத்துமே பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களை நம்பியே நகர்கிறது. துணியிலான பொருட்களைப் போல் அல்லாமல் பிளாஸ்டிக் மட்குவதில்லை என்பதே மிகப்பெரிய மைனஸ். பிளாஸ்டிக் மனிதகுலத்திற்கே பல்வேறு இடையூறுகளே பரிசாக அளிக்கின்றன. 

$180bn investment in plastic factories feeds global packaging binge |  Environment | The Guardian

ஒருசில பிளாஸ்டிக் பொருட்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறிவதால் மறுசுழற்சியும் சாத்தியமில்லாமல் போகிறது. அவை மட்காமல் மண்ணோடு மண்ணாக புதைந்து போவதால் மழைநீரால் உட்புக முடியவில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் முழுவதுமாகப் பாதிப்படைகிறது. இதன் காரணமாக குடிநீர் பிரச்சினை வருகிறது. இவ்வாறு சங்கிலித் தொடர் போல இயற்கையின் இயங்கியலை சிதைக்கும் பொருளாக பிளாஸ்டிக் மாறி நிற்கிறது. 

“10 நாட்களே கெடு.. அதற்குள் பிளாஸ்டிக் பொருட்களை கைவிடுங்கள்; மீறினால் நடவடிக்கை”

இதனை கருத்தில் கொண்டு 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. கொரோனா பரவல் காரணமாக, பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தற்போது அதனை அமல்படுத்தும் பணிகள் தீவிரமாகியுள்ளன. 

“10 நாட்களே கெடு.. அதற்குள் பிளாஸ்டிக் பொருட்களை கைவிடுங்கள்; மீறினால் நடவடிக்கை”

விதிகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களை வணிக நிறுவனங்கள் விநியோக்கின்றன. அதேபோல ஒருசில உற்பத்தி தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து வருகின்றன. இதனை தடுக்கும்பொருட்டு, இவ்வாறு செயல்படும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தீபாவளியன்று சென்னையில் காற்றுமாசு, ஒலிமாசு அதிகரிக்கவில்லை - மாசு  கட்டுப்பாட்டு வாரியம்

புகார்களைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அந்தந்த மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம். அவர்களுடைய தொடர்பு விவரங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் (https://tnpcb.gov.in/contact.php) கொடுக்கப்பட்டுள்ளன. புகார்களை மின்னஞ்சல் / கடிதம் / தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம். புகார் அளிப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றை அளிக்க வேண்டும்.