தடுப்பூசியால் கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று

 
corona

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.45 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.66 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

Delhi logs no Covid death, 22 new cases in 24 hrs; positivity rate at 0.04%

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 741 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 421பேர் ஆண்கள், 320 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 21 ஆயிரத்து 762ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 8ஆயிரத்து 536 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 310 பரிசோதனை மையங்கள் உள்ளன.

corona

இன்று 13 பேர் உயிரிழந்துள்ளார். 7பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 6ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது. இன்று 808 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 76ஆயிரத்து 825ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.