தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் குறைந்த தொற்று பாதிப்பு

 
corona update

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.45 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.65 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

Coronavirus update: India records nearly 35,000 cases in a day, death toll  above 26,000

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட  775 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 464 பேர் ஆண்கள், 311 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 978ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 78 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 309 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று 12 பேர் உயிரிழந்துள்ளார். 2பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது. இன்று 896 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 72 ஆயிரத்து 564 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,