தமிழகத்தில் மேலும் 782 கொரோனா, 13 பேர் உயிரிழப்பு

 
corona

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.45 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.64 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

Coronavirus Latest Updates: 1,133 Record Covid Deaths In India In 24 Hours,  75,809 Cases

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 782 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 463 பேர் ஆண்கள், 319 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 211ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 309 பரிசோதனை மையங்கள் உள்ளன.

corona

இன்று 13 பேர் உயிரிழந்துள்ளார். 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. இன்று 907 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 71 ஆயிரத்து 668ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது