டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்- எம்.பி அதிரடி

 

டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்- எம்.பி அதிரடி

மத்திய அரசு தனக்கு டெல்லியில் ஒதுக்கிய வீட்டை தமிழக மக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்- எம்.பி அதிரடி

கும்மிடிப்பூண்டி – சென்னை புறநகர் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் தண்ணீர் கூட இல்லாமல் பெயரளவுக்கு திறந்து வைக்கப்பட்ட கழிவறையில் ஆய்வு செய்த எம்பி அதிகாரிகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ஜெயக்குமார், “தமிழகத்திலிருந்து டெல்லிக்கு வேலை தேடி வருபவர்களும், படிக்க வரும் மாணவர்களும், சுற்றிப்பார்க்க வருபவர்களும் தனக்காக மத்திய அரசு, டெல்லியில் 116, South Avenue, Near President Estate, New Delhi – 110011 முகவரியில் ஒதுக்கியுள்ள அரசு வீட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படும். அந்த இல்லத்தை பராமரிக்க ஒருவரை நியமித்துள்ளேன்” என தெரிவித்தார்.