பிராங்க் என்ற பெயரில் மாணவர் மீது தாக்குதல்...தூக்கிட்டு தற்கொலை செய்த பரிதாபம்!

 
suicide

கோவை தனியார் கல்லூரியில் பிராங்க் செய்து தாக்கப்பட்டதால் மனம் உடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் திருப்பூரை சேர்ந்த சத்ய நாராயணா என்ற இளைஞர் கல்வி பயின்று வந்தார். சத்ய நாராயணாவை பிராங்க் என்ற பெயரில் அவருடன் படிக்கும் மாணவர்கள் சிலர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த சத்ய நாராயணா கல்லூரிக்கு செல்லாமல் திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். திருப்பூரில் உள்ள தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

பிராங்க் என்ற பெயரில் கிண்டல் செய்து மாணவனை தாக்கிய மூன்று மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து தனியார் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் சத்ய நாராயணா, மிகச் சிறந்தவராகவும் ஒழுக்கமுள்ளவராகவும் இருந்து வந்துள்ளார்.  பிராங்க் செய்து தாக்கப்பட்டதால் மனம் உடைந்த அவர் வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.