சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..

 
rain

சென்னையில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகம் முழுவதும் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள  அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (25.09.2024) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

26.09.2024 மற்றும் 27.06.2024: தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும்.  

28.09.2024 மற்றும் 29.09.2024: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும்.   

rain

30.09.2024 மற்றும் 01.10.2024: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

தமிழகத்தில்  அடுத்த 2 தினங்களுக்கு (25.09.2024 மற்றும் 26.09.2024)  அதிகபட்ச வெப்பநிலை  ஒருசில  இடங்களில்  2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.  அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பில்,  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை   பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.