மிரட்டும் `டானா' புயல் எதிரொலி- 28 ரயில்கள் ரத்து

 
train  train

வங்கக்கடலில் உருவான 'டானா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் ரெயில்களும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ரெயில்களும், வெளிமாநிலங்களில் இருந்து வெளிமாநிலங்கள் செல்லும் ரெயில்களும் என 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

#Breaking : வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..

* சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா செல்லும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(12840), சென்டிரலில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் சாலிமார் செல்லும் அதிவிரைவு ரெயிலும்(22826), சென்டிரலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சு செல்லும் சிறப்பு ரெயிலும்(06089), இன்று(23-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது.

* நெல்லையில் இருந்து காலை 3 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் புருலியா செல்லும் அதிவிரைவு ரெயிலும்(2260), கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22503), திப்ருகாரில் இருந்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22504) இன்று(23-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை சென்டிரலில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(12842), சென்டிரலில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சந்திரகாச்சு செல்லும் ஏ.சி.எக்ஸ்பிரஸ் ரெயிலும்(22808) நாளை(24-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது.

* தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சந்திரகாச்சு செல்லும் சிறப்பு ரெயில்(06095) நாளை(24-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது.

* சாலிமாரில் இருந்து மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(12841), ஹவுராவில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(12839), சந்திரகாச்சியிலிருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் சிறப்பு ரெயிலும்(06090) நாளை(24-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது.

* மேற்கு வங்க மாநிலம் காரக்பூரில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் அதிவிரைவு ரெயிலும்(வண்டி எண்.22603), ஹவுராவில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் அதிவிரைவு ரெயிலும்(12663) நாளை(24-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது.

* நெல்லையில் இருந்து காலை 1.50 மணிக்கு புறப்பட்டு சாலிமார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(06087) நாளை(24-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது.

* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்(20896) வரும் 25-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு புவனேஸ்வர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்(20895) வரும் 27-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.

train

தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கும் செல்லும் 17 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வெளிமாநிலம் செல்லும் 13 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக மொத்தம் 30 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.