கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்கள்.. முதல்வர் நிதியுலிருந்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்..

 
கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்கள்.. முதல்வர் நிதியுலிருந்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்..  

  மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று, கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தபா ரூ.2 லட்சம் வீதம்,  6 வட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.  

Image

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை, மாமல்லபுரத்திற்கு 17 மாணவர்கள் 1.9.2024 அன்று சுற்றுலா சென்றனர். இதில் மூன்று இளைஞர்கள் கடலில் குளித்த போது இராட்சத அலையில் சிக்க உயிரிழந்தனர். கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்தினருக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆழ்ந்த வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்ததோடு,உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டிருந்தார். 

Image

அதனடிப்படையில்,   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி கே. சேகர்பாபு அவர்கள், இன்று (25.09.2024) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று. கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த க.கவுதம், சூளை பகுதியைச் சேர்ந்த பயிரகாஷ், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மரோஷன் ஆகிய 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தவா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.