நிலா பிறை போட்ட கொடியை உடனே அகற்றுங்கள்! திருப்பரங்குன்றத்தில் அடுத்த சர்ச்சையை கையிலெடுத்த இந்து மக்கள் கட்சி

 
ந் ந்

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தல விருச்ச கள்ளத்தி மரத்தில் நிலா பிறை போட்ட கொடியை அகற்றிவிட்டு சேவல் கொடி ஏற்ற வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர். 


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில்  ஆயிரமாண்டுகள் பழமையான தல விருச்ச மரம் என்று அழைக்கக் கூடிய  கல்லத்தி மரம் உள்ளது. கல்லத்தி மரம் மலை மீது உள்ள தர்காவில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இருப்பதாகவும், பல ஆண்டுகளாக சந்தனக்கூடு விழாவின்போது தர்காவிற்குள் இருக்கக்கூடிய கொடிமரத்தில் மட்டும் நிலா பிறை போட்ட சிவப்பு கொடியை தர்கா நிர்வாகம் ஏயற்றி வந்ததாகவும், ஆனால் சமீப காலமாக தர்காவிற்குல்  இருக்கக்கூடிய கொடிமரத்திலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருக்கக்கூடிய கல்லத்தி மரத்திலும் நிலா பிறை போட்ட சிகப்பு கொடியை ஏற்றுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

கார்த்திகை தீப விவகாரத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த தர்காவிற்கு நன்றி தெரிவித்த இந்து மக்கள் கட்சி தற்போது கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட கொடியேற்றுவதற்கு இந்து மக்கள் கட்சி ஆட்சபனை தெரிவித்துள்ளது. கொடி இருக்கக்கூடிய மரம் மற்றும் அந்த இடம் தர்காவிற்கு சொந்தம் என்று நாளை மீண்டும் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் வரக்கூடிய சந்தனக்கூடு விழாவின்போது தர்காவிற்குள் இருக்கும் கொடி மரத்தில் மட்டும் கொடியை மாற்றிக் கொள்ளவும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருக்கக்கூடிய கள்ளத்தி மரத்தில் உள்ள நிலா பிறை போட்ட சிவப்பு கொடியை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக அங்கு சேவல் கொடியை ஏற்ற வேண்டும் இந்து மக்கள் கட்சி சார்பாக திருப்பரங்குன்றம் அருந்ததி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மலை மீது தர்கா நிர்வாகம் கொடியேற்று தொடர்பாக இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.