பஞ்சாகத்தின்படி இன்று சனிப்பெயர்ச்சி - திருநள்ளாறில் குவியும் பக்தர்கள்

 
tn

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர்  ஆலயம் உள்ளது. இங்கு  சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு தனி சந்நிதி கொண்டு அருள் பாலிக்கிறார்.  இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும்.  கடந்த 2020 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி விழாவின் போது சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார். தற்போது இந்த ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நடைபெறுகிறது.

tn

இந்நிலையில் சனி பெயர்ச்சி ஒட்டி புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் திரண்டு உள்ளனர் திருக்கணித பஞ்சாங்கப்படி மாலை 6:04 மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார் சனீஸ்வரன். சனிப்பெயர்ச்சி நிகழ்வை ஒட்டி ஆந்திரா,  கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இன்று பக்தர்கள் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனிப்பெயர்ச்சி ஒட்டி இன்று கோயிலுக்கு ஏராளமான வெளி மாநில பக்தர்கள் வருகை புரிய உள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

tn

இதனிடையே திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நிர்வாகம் தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்சவங்கள் யாவும் வாக்கிய பஞ்சாங்கம் கணித முறைப்படி தான் நடைபெற்று வருகிறது.  அதன்படி வரும் மார்கழி மாதம் டிசம்பர் 2023 ல் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.  அந்த  சமயம் சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர உள்ளார்.  சனிப்பெயர்ச்சி விழா தேதி நடைபெறும் நேரம் ஆகியவை வாக்கிய பஞ்சாங்கம் படி மிகத் துல்லியமாக அறிவிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.