கல்வி நிலையங்களில் அரசியல் ஆபத்தானது- திருமாவளவன்

 
அதிமுக பக்கம் நெருங்குகிறேனா? அதெல்லாம் இல்ல: ஜெயக்குமாருக்கு திருமாவளவன் பதிலடி

தமிழக மாணவர்களின் நலனுக்காக கவலைப்படுகின்றவரை போல ஆளுநர் பேசுவது உண்மையல்ல, தமிழக அரசுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்குவதே ஆளுநரின் நோக்கம் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரிப்பு; திருமாவளவன்  பேட்டி


கள்ளக்குறிச்சியில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “சென்னை அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற முற்போக்கு சொற்பொழிவு போன்ற சம்பவங்களை இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்நாட்டின் நிலை எதிர்காலத்தில் கவலைக்குரியதாக வடமாநிலத்தை போல மாறுவதற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கல்வி நிலையங்களில் திட்டமிட்டு இதுபோன்ற அறிவியலுக்கு ஒவ்வாத அரசியலை பேசுவது ஆபத்தானது. ஆகவே இது போன்ற நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

விளம்பத்திற்காக அரசியல் செய்யும் பாஜக… உங்க நடிப்பு வடக்கே செல்லுமே தவிர…  தமிழ்நாட்டில் எதுவும் பலிக்காது… விசிக தலைவர் அதிரடி..! – Madhimugam

தமிழ்நாடு ஆளுநர்  சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதை தொடர்கதையாக வைத்துள்ளார். அவருக்கு திமுக அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு முரண்பாட்டை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாக இருக்கிறது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் பேசுவது போல அவர் காட்டிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல. தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி மாணவர்களின் நலனுக்காக கவலைப்படுகிறவரை போல பேசுவது உண்மை அல்ல. திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகின்றார், அது ஏற்புடையது அல்ல” என்றார்.