மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டி - திருமாவளவன் அறிவிப்பு..
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ.க மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்திறு சட்டசபை தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து நவம்பர் 23ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில் இந்த தேர்தலிலும், ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜ.க - சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்தே களம் காணவுள்ளன. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
அந்த வகையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டிட உள்ளதாக அக்கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “நவம்பர் 20ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிற 10 தொகுதிகளின் பட்டியலை இன்று அவுரங்காபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும் , ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சி 10 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து மஹாரஸ்டிரா சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறது.
ஏனைய மற்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்: கங்காபூர், பத்நாபூர், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர், அவுரங்காபாத் (மையம்), முள்ளன்ட் ( மும்பை), கன்னட் .
ராஷ்ட்ரிய ஜனதா தல் போட்டியிடும் தொகுதிகள்: பிவாண்டி, மலேகோன், வாசிம், அவுரங்காபாத் (மேற்கு), அவுரங்காபாத் (கிழக்கு), புலம்பிரி, மும்பை மலாட், தாராவி, போக்கர்டன் ஜல்னா, துலே” என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொது தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சி பத்து தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 19, 2024
ஏனைய மற்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:… pic.twitter.com/BE1PN2KJ4l