புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் திருமாவளவன் கலந்துகொள்வது உறுதியானது!

 
vijay thiruma

புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுன் நிறுவனம் வெளியிடும் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்னும் நூல் வெளியீட்டு விழா டிசம்பர் 6ல் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே திருமாவளவனும் ஒரே மேடையில் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக கூறினார். 

vijay

இந்த நிலையில், புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதால் அணி மாறிவிடுவோம் என்பது எந்த வகை உளவியல் என கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், முதலில் முதலமைச்சர் வெளியிட நான் பெற்றுக்கொள்வதாகவே திட்டமிடப்பட்டிருந்தது என கூறியுள்ளார். நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பார் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டதாகவும், அப்போது விஜயின் தவெக மாநாடு நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார். இன்னொரு கூட்டணிக்கு செல்ல என்ன தேவை எழுந்துள்ளது எனவும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.