எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மறைவு - முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

 
tn

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் ,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான  திருமகன் ஈவேரா எம்எல்ஏ மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது (46) .  எம்எல்ஏ திருமகனின் மரணம் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

tn

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை ஒட்டி ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று , அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி,  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

tn

அப்போது நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி ,மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி , பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ,கணேசமூர்த்தி ,விஜய் வசந்த், செல்லகுமார் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ஏஜி வெங்கடாசலம் , செல்வ பெருந்தகை, ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணி, துணை மேயர் செல்வராஜ் , ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் உடன் இருந்தனர்.