இந்த 4 மாநிலங்களில் தான் அதிக சாலை விபத்துகள் நடக்கிறது:தமிழகத்திற்கு 2வது இடம்..!

 
1

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் இந்தியாவின் முதல் 4 மாநிலங்களின் பெயரை சமீபத்தில் கூறினார்.


இது குறித்து அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் 1,78,000 பேர் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர். இதில் 60 சதவீதம் பேர் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள்.

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் விபத்துகள் மற்றும் இறப்புகள் 50 சதவீதம் குறையும் என்று தனது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் கூறிய அமைச்சர், அதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எங்கள் துறை வெற்றி பெறாத பகுதி இது என்று கூறினார்

அதிக விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் குறித்து மத்திய அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளாதாவது: உ.பி.யில் 23652, தமிழகத்தில் 18347, மகாராஷ்டிராவில் 15366, மத்தியப் பிரதேசத்தில் 13798 வழக்குகள் பதிவாகியுள்ளன. டில்லியில் 1457 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், பெங்களூரு 915 இறப்புகளுடன் ஜெய்ப்பூர் 850 இறப்புகளுடன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துக்களில் இவ்வளவு பேர் இறந்தாலும் சட்டத்தின் மீது அச்சம் இல்லை. சிலர் ஹெல்மெட் அணியாதவர்கள், சிலர் சிவப்பு சிக்னல்களை மீறுகின்றனர். இதுதவிர லாரிகளை சாலையில் நிறுத்துவதே விபத்துகளுக்கு முக்கிய காரணம். பல லாரிகள் லேன் ஒழுக்கத்தை பின்பற்றுவதில்லை.
சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ள செல்லும் போதெல்லாம், இந்தியாவில் உள்ள சாலை பாதுகாப்பு அமைப்பு பற்றி பேச வெட்கமாக உணர்கிறேன். நான் முகத்தை மறைக்க முயற்சிக்கிறேன் என்று கூறினார்.

இந்தியாவில் பஸ் பாடிகளை தயாரிப்பதில் சர்வதேச தரத்தை கடைபிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விபத்து ஏற்பட்டால் எளிதில் உடைக்கும் வகையில் பஸ்சின் ஜன்னல் அருகே சுத்தியல் இருக்க வேண்டும் என்றார்.