மீன்பிடிக்க சென்ற இளைஞர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு

 
death

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதைவணை புதூர் கிராமம் அருகே பாம்பாற்றில் உறவினருடன் மீன்பிடிக்கச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்( வயது 18) வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

Nearly 1,900 dead in monsoon rains, floods across India - The Economic Times
ஊத்தங்கரை அடுத்த கதைவனி கிராமத்தை சேர்ந்த தனியார் பார்மசி கல்லூரியில் படிக்கும்  விக்னேஷ் தனது உறவினர்கள் பரமசிவம்  வயது(45)  ஆறுமுகம் வயது ( 37) ஆகிய இருவருடன் சேர்ந்து பாம்பாற்றில் ஓரம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது விக்னேஷ்  மீன் பிடிப்பதை, ஆற்றில்  இறங்கி செல்பி எடுத்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் நிலை தடுமாறி விழுந்ததாக தெரிகிறது. அவர்களை மீட்க  உடன்னிருந்தவர் முயற்சி செய்த பேதும் ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் மீளமுடியாத விக்னேஷ் ஆற்றின் சுழலில் சிக்கி நீரில் இழுத்து செல்லப்பட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த  பொதுமக்களும் ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்களும் மாணவனை தேடும் பணியில் தீவிரமாக  ஈடுப்பட்டு வருகின்றனர்  இந்த சம்பவமானது கிராம மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.