விஜய்க்காக வைத்த பிறந்தநாள் வாழ்த்து பேனர் விழுந்ததால் நடந்த விபரீதம்

 
விஜய் பேனர்

சின்னசேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாள் விழாவிற்காக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் காற்றில் சாய்ந்து விழுந்ததில் பேனருக்கு அடியில் 10 வயது சிறுவன் சிக்கிக்கொண்டார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் விஜயாபுரம் என்ற பகுதிக்கு செல்லும் வழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு பிறந்தநாள் விழா பேனரை அவரது ரசிகர்கள் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மழைக்கு முன்பாக வீசிய பலத்த காற்று காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான அந்த டிஜிட்டல் பேனர் காற்று வேகத்தில் நிற்க முடியாமல் கீழே சாய்ந்தது. டிஜிட்டல் பேனர் சாகின்ற போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவன் மேல் அந்த டிஜிட்டல் பேனல் விழுந்துள்ளது. நல்ல வேலையாக பேனர் சிறுவன் மீது விழுந்த போது அதே இடத்தில் ஒரு இருசக்கர வாகனமும் நின்று கொண்டிருந்தது. 


நல்வாய்ப்பாக இருசக்கர வாகனத்தின் மீதும் அந்த டிஜிட்டல் பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தின் உதவியால் அந்த சிறுவனுக்கு எந்த விதமான காயங்களும் ஏற்படாமல் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து அந்த டிஜிட்டல் பேனரை அப்புறப்படுத்தி டிஜிட்டல் பேனர் அடியில் சிக்கி இருந்த சிறுவனை மீட்ட நிலையில் இருசக்கர வாகனத்தின் உதவியுடன் சிறுவன் எந்தவிதமான காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் தொடர்ந்து அதே இடத்தில் அகற்றப்படாமல் இருந்ததால் காற்றின் அதிவேகம் காரணமாக அந்த டிஜிட்டல் பேனர் சாய்ந்து இந்த சிறிய விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பலத்த காற்று வீசும் போது அந்த டிஜிட்டல் பேனர் சாய்ந்து விழும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அந்த பேனரை அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.