மாணவியின் கை, கால் மீது ஏறி இறங்கிய பேருந்தின் டயர்

 
ஹ்

 ஓடும் பேருந்தில் இருந்து பள்ளி மாணவி குதித்ததில் பேருந்து டயர் மாணவியின் கை மற்றும் கால்களில் ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அடுத்த சினிகிரிப் பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ்.  இவரது மகள் நவ்யாஸ்ரீ,  கெலமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.   நேற்று மாலை இவர் கெலமங்கலத்தில் இருந்து தர்மபுரி செல்லும் அரசுப் பேருந்தில் பள்ளிவிட்டு சினிகிரிப்பள்ளி கிராமத்திற்கு சென்று இருக்கிறார்.  சினிகிரிப்பள்ளியில் நிற்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் பல மீட்டர்கள் தூரம் சென்றிருக்கிறது.

க்

 தனது கிராமத்தில் பேருந்து நிற்காமல் செல்கிறதே என்ற பதற்றத்தில் மாணவி ஓடும் பேருந்தில் இருந்து குதித்திருக்கிறார்.  மாணவி பதட்டத்தில் தடுமாறி விழுந்ததில் பேருந்தின் பின்பக்க டயர் மாணவியின் கை மற்றும் கால்களில் ஏறி ஏறி இறங்கி இருக்கிறது.  இதில் படுகாயம் அடைந்த மாணவியை அதே பேருந்தில் தூக்கிச்சென்று உத்தனப்பள்ளி  உத்தனப்பள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.   மாணவியின் உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்து மாற்றப்பட்டிருக்கிறார்.

 பேருந்து வழக்கம்போல நிறுத்தத்தில்நிற்காமல் சென்றதால் தான் இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்திருப்பதால் இது குறித்து உத்தனப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.