தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மூன்று மாதங்களில் பலன் கிடைத்துவிட்டது - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்

 
அப்ப்

 மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் .  இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய மூன்று மாதங்களில் பலன் கிடைத்துவிட்டது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 சிம்லாவில் நடைபெற்ற சட்டப்பேரவை சபாநாயகர்கள் மாநாட்டில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய அப்பாவு,  சென்னை  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’ மூன்று  வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது வரவேற்கக் கூடிய விஷயம் .  கடந்த ஆகஸ்ட் மாதம் திமுக சார்பில் சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   இதே போன்று பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.   இதனால் ஒரு முடிவை எடுக்க புள்ளி வைத்தால் போதும் .  பின்னர் ஒரு நாளில் பலன் கிடைக்கும் ’’என்றவர்,  ’’தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மூன்று மாதங்களில் பலன் கிடைத்துவிட்டது என்று  பெருமிதத்துடன் கூறினார்.

அப்

 அவர் மேலும் சிம்லா பயணம் குறித்து பேசியபோது,   ’’மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விவாதிக்க சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் தீர்மானங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,  மாநிலங்களிலிருந்து தீர்மானங்கள் குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசிற்கு அனுப்பினால் எதற்கு நிராகரிக்கப்படுகிறது என்றும், ஏன் காலதாமதம் ஆகிறது என்பதற்கான விளக்கம் மத்திய அரசின் தரப்பில் இல்லை . இதற்கான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும்  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதனை பெரும்பாலான மாநில சபாநாயகர்கள் வரவேற்றார்கள்’’ என்று தெரிவித்தார்.

 அவர் மேலும் அது குறித்து பேசியபோது,  ‘’ மாநிலத்தில் இருந்து ஒரு தீர்மானம் அனுப்பி வைத்தால் பதில் அளிக்க உரிய கால நிர்ணயம் அமைக்க வேண்டும் என்றும் சபாநாயகர்கள் மாநாட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது’’ என கூறினார்.