போராட்டத்துக்கு சென்ற ஆசிரியர்கள்.. மாணவர்களுக்கு பாடம் எடுத்த மாணவி!
31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் வரவில்லை என்பதால் மாணவியே ஆசிரியராக மாறி சக மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
ஆசிரியர்கள் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், புதூர் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஐந்து யூனியனில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபட்டுள்ளதால் மாணவர்கள் மட்டும் வகுப்பறையில் அமர்ந்திருக்கின்றனர்.
#Watch | வேலை நிறுத்த போராட்டத்தால் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள்.. மாணவர்களுக்கு பாடம் எடுத்த மாணவி!
— Sun News (@sunnewstamil) September 10, 2024
31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,… pic.twitter.com/ASKMN3XE5G
இந்த நிலையில் கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் வரவில்லை என்பதால் மாணவி ஒருவர் சக மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தினார்.