பிரபல யூட்யூபர் மகன் தலைமறைவு

 
gopi

யூட்யூப் சமையல் நிகழ்ச்சியின் பிரபலம் டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் பார் ஊழியரை தாக்கிய வழக்கில் தலைமறைவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூட்யூபில் பிரபலமான டாடி ஆறுமுகம் என்பவரின் மகன் கோபிநாத், இவர் தனது சித்தப்பா மகன் மற்றும் நண்பர்களுடன் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திவிட்டு தகராறில் ஈடுப்பட்டு உணவகத்தில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளனர். இதனை தட்டிக்கேட்ட உணவக ஊழியர் ஜார்ஜஸ் சினாசை தாக்கியதாக பார் ஊழியர்கள்  முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,கோபிநாத்துடன் மது அருந்திய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்தை தேடி வருகின்றனர். தலைமறைவான கோபிநாத் அரியலூரில் மூன்று இடங்களில் ஹோட்டல்கள் வைத்து நடத்திவருகிறார்.