2023ம் ஆண்டு கனமழையின்போது உயிரிழந்தவரின் எலும்புக்கூடு சிக்கியதால் பரபரப்பு

 
டக்

சென்னை கிண்டி மடுவங்கரையில் கட்டுமான பணியின்போது எலும்புக் கூடு தென்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வேளச்சேரியில் 2023 டிச.4ஆம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக  தோண்டப்பட்ட 50அடி பள்ளத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டடத்திற்குள் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 10 பேரை மீட்டனர். 50 அடி கட்டுமான பள்ளத்தில் வெள்ளம் புகுந்து சகதியில் சிக்கிக் கொண்ட நரேஷ் மற்றும் ஜெயசீலன் ஆகியோரை 100 மணி நேர போராட்டத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சடலமாக மீட்டனர்.

இந்த நிலையில் கட்டுமான பணி நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகுல் பக்டி, தீபக் பக்டி ஆகியோரில் ராகுல் பக்டி பொதுமக்களால் மீட்கப்பட்டார். தீபக் பக்டி என்ன ஆனார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த இடத்தில் தற்போது கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பணியில் இருந்த பாதுகாப்பு இன்ஜினியர் வீரன், மெஷின் ஆபரேட்டர் சுரேஷ் ஆகிய இருவரும் கட்டுமான பணி நடைபெறும் இடத்தின் அடித்தள பகுதியில் பார்த்துக் கொண்டிருந்தபோது எலும்பு மண்டை ஓடு இருந்தது. தகவல் அறிந்த கிண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அங்கிருந்த எலும்புகளை கைது ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான தீபக் பக்டியின் எலும்புக் கூடாக இருக்கலாம் என தெரிவித்தனர். மருத்துவ சோதனைகள் முடிந்து டாக்டர்கள் முறைப்படி தெரிவிப்பார்கள் எனவும் போலீசார் கூறினர்.