சூர்யாவுக்கு ஏற்பட்ட அதே நிலைமை கார்த்தி, ஜோதிகாவுக்கும்!

 
jk

சூர்யாவுக்கு ஏற்பட்ட அதே நிலைமை அவரது தம்பி கார்த்திக்கும் அவரது மனைவி ஜோதிகாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது.  சூர்யாவின் படங்களை திரையிட விடமாட்டோம் என்று மயிலாடுதுறை பாமகவினர் எச்சரித்துள்ளனர்.   மயிலாடுதுறைக்குள் சூர்யா  காலெடுத்து வைக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளனர்.   இதனால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் இந்த பகுதியில் திரையிடப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

மயிலாடுதுறையில் சூர்யா நடித்த வேல் திரைப்படம் பாமகவினர் முற்றுகை போராட்டத்தால் நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக வேறு படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

j

 இந்த நிலையில் சூர்யாவின் தம்பி கார்த்தி அவரது மனைவி ஜோதிகா படங்களுக்கும் இந்த எதிர்ப்பு எழுந்திருக்கிறது.   பண்ருட்டியை சேர்ந்த பாமகவினர் சூர்யா படங்கள் மட்டுமல்லாது சூர்யா குடும்பத்தினரின் படங்களையும் பண்ருட்டிக்குள் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

 ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதற்காக  ஜெய்பீம்படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட பண்ருட்டி பாமக இளைஞரணியினர் போலீசில் புகாரளித்தனர்.   அதன்பின்னர்,  சூர்யா விவகாரத்தில் அமைதியாக இருக்கிறோம்.   ராமதாஸ் ,அன்புமணி ராமதாஸ் அவர்களின் கட்டளைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர் பண்ருட்டி நகர பாமக இளைஞரணி நிர்வாகிகள்.

pp

 சூரியா மன்னிப்பு கேட்காவிட்டால் சூர்யாவின் படங்களை மட்டுமல்ல அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களின் திரைப்படங்களையும் பண்ருட்டி பகுதியில் உள்ள திரையரங்குகளில் வெளியாக விடமாட்டோம் என்று எச்சரித்திருக்கிறார்கள்.   சூர்யாவின் படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளை எல்லாம் அடித்து நொறுக்குவோம் என்று ஏற்கனவே மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு வின் மகன் எச்சரித்திருக்கிறார்.  இந்நிலையில் மயிலாடுதுறையை தொடர்ந்து தற்போது பண்ருட்டி பகுதியிலும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் படங்களை  திரையிட எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .