அரசு பேருந்தின் பின் டயர் திடீரென கழண்டு ஓடியதால் பரபரப்பு

 
ச்

மாநகர அரசு பேருந்தின் பின் டயர் திடீரென கழண்டு விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் நின்ற அரசு பேருந்தால் சுமார் 2 கிலோமீட்டர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் செங்கல்பட்டு இடையே தடம் 500 கொண்ட மாநகர அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் வழக்கம்போல அரசு மாநகரப் பேருந்து ஒன்று தாம்பரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து சிங்கப்பெருமாள் கோவில் அருகே வரும்பொழுது மாநகர அரசு பேருந்தில்  பின் சக்கரம் திடீரென கழண்டு விழுந்துள்ளது இதனால் பேருந்து சாலையிலேயே நிறுத்தப்பட்டது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் புறப்பட்டனர் 

நடுவழியில் நின்ற அரசு பேருந்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மேம்பால பணி நடைபெறுவதாலும் திடீரென அரசு பேருந்து நடுவழியில் நின்றாலும் சிங்கப்பெருமாள் கோவில் முதல் கீழக்கரணை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.