இறந்த மாட்டிற்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்

 
இறந்த மாட்டிற்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்

பரமக்குடியில் உயிரிழந்த மாட்டிற்கு நினைவஞ்சலி சுவரொட்டி ஒட்டியுள்ள மாட்டின் உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் வளர்த்த காளை மாட்டின் நினைவு தினத்தை சுவரொட்டிகள் ஒட்டி அனுசரித்து உள்ளார் மாட்டின் உரிமையாளர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்தவர் கேசவன். இவர் உழவர் சந்தை பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி வாரச்சந்தையில் 8 ஆயிரம் ரூபாய்க்கு காளை மாட்டை விலைக்கு வாங்கி உள்ளார். மாட்டிற்கு கணேசன் என பெயர் வைத்து தனது வீட்டில் ஒரு பிள்ளை போல் வளர்த்து வந்த நிலையில் 2021 ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உயிரிழந்தது. உயிரிழந்த மாட்டை தனது சொந்த இடத்தில் அடக்கம் செய்துள்ளார். அதிகம் பாச கொண்ட மாடு உயிரிழந்ததால் கோழி கறிக்கடைக்கு கணேசன் என பெயர் மாற்றம் செய்துள்ளார். 

Thanthi TV | #JUSTIN || கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே பாஜக - போலீசார்  இடையே தள்ளுமுள்ளு தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை உருவ பொம்மையை ...

மாடு உயிரிழந்து மூன்று ஆண்டு ஆன நிலையில் மாட்டின் புகைப்படத்துடன் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி என பரமக்குடி நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். மேலும் தனது கடையில் மாட்டின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். வீட்டில் வளர்த்த மாடு உயிரிழந்ததை அனுசரிக்கும் வகையில் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.