ஃபோர்டு ஆலைக்கு 2028 வரை ஒப்புதல் நீட்டிப்பு

 
chennai ford

போர்டு நிறுவனத்தின் கோரிக்கையின் படி மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணையை (Consent to Operate- CTO) புதுப்பித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு போர்டு  நிறுவனத்தின் தொழிற்சாலை ரூ.1,700 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த 2009ம் ஆண்டு, போர்டு இந்தியா தொழிற்சாலையை ரூ.1,500 கோடி கூடுதல் முதலீட்டில் விரிவாக்கம் செய்யவும், புதிதாக இன்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலை நிறுவவும், கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் அத்தொழிற்சாலையின் உற்பத்தித்திறன் இரு மடங்காக உயர்ந்ததுடன், ஆண்டுக்கு 2.50 லட்சம் கார் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. இந்நிலையில் பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் தனது உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், 2022ம் ஆண்டு வெளியேறியது.ஆனால், தமிழகத்தில் உள்ள ஆலையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, தன்வசமே வைத்திருந்தது.

Ford announces final settlement package for Chennai factory workers - The  Hindu BusinessLine

இந்நிலையில், தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை (Consent to Operate- CTO) கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானது.இதனைத் தொடர்ந்து இசைவாணையை புதுப்பிக்க வேண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் போர்டு நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.இந்த விண்ணப்பதை பரிசீலனை செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இசைவாணையை 31.3.2028 வரை புதுப்பித்து அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவின் சிகாகோவில், செப்.10-ம் தேதி போர்டு நிறுவனத்தின் ஐஎம்ஜி தலைவர் கே ஹார்ட், துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி, போர்டு இந்தியா இயக்குநர் ஸ்ரீபாத் பட் உள்ளிட்டோரை சந்தித்து தமிழகத்தில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும், உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.இதன்பிறகு போர்டு நிறுவனம் தனது உற்பத்தி பிரிவை மீண்டும் தொடங்குவதற்கான விருப்ப கடிதத்தை தமிழக அரசிடம் அளித்துள்ளது.