சிறுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் அடித்துக் கொலை

 
murder

சிறுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய பீகார் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

First-Degree Murder in California - 5 Examples
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் தனியார் பனியன் நிறுவனத்தின் விடுதியில் தங்கி பணியாற்றி வருபவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரித்தீஷ்யாதேவ் மகன் அனில்குமார்(22). இவர், தெக்கலூர் அருகே எம்.நாதம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வரும் கோவையை சேர்ந்த சிறுமிக்கு வாட்ஸ் அப்-ல் ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். 

இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால் அனில்குமாரை அருகில் இருந்த காட்டுப்பகுதியில் வைத்து நேற்று இரவு தாக்கி விடுதி அருகே போட்டுச் சென்றுள்ளனர்.  இதையடுத்து, பலத்த காயமடைந்த அனில்குமாரை விடுதியில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அனில்குமார் உயிரிழந்தார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அவிநாசி போலீசார், அனில்குமாரை தாக்கி கொலை செய்த, சிறுமியின் உறவினர்களான கோவையை சேர்ந்த ரவி(40), பாபு(40), ரஞ்சித்(23), மணிகண்டன்(23) ஆகியோரை கைது செய்தனர்.  மேலும் தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.