வீடு இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

 

வீடு இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

வீடு இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வீடு இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

ராதாபுரத்தில் குடியிருப்புகளுக்கு அருகே கல்குவாரி இயங்கி வருகிறது. இதனால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பினை மீறித்தான் அந்த கல்குவாரி செயல்பட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில், கல்குவாரியில் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைத்து வெடிக்கப்பட்டது. வெடித்த அதிர்வில் கல்குவாரியின் அருகே இருந்த வீடு இடிந்து விழுந்து இருக்கிறது. வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது சிறுவன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறான்.

சம்பவம் குறித்து தாசில்தார் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் உயிரிழந்ததை அடுத்து சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான கல்குவாரியை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாசில்தாரும் காவல்துறையினரும் பொதுமக்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.