கோயில் வாசலுக்குள் புகுந்த அரசு பேருந்து! பதைபதைக்கும் காட்சி
கோவில்பட்டியில் அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த கோவில் வாசலில் மோதி நின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டி வழியாக தென்காசிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்தப் பேருந்தை லட்சுமண பெருமாள் ஒட்டி வந்துள்ளார். பேருந்து கோவில்பட்டி புது ரோடு வழியாக அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து புது ரோடு இறக்கத்தில் உள்ள முச்சந்தி விநாயகர் கோவில் வாசலில் மோதி நின்றது. இதில் பயணம் செய்த சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கோயில் வாசலுக்குள் புகுந்த பேருந்து#Bus #Temple #RoadAccident #News18Tamilnadu https://t.co/1V8D6J482Y pic.twitter.com/JEJAOW9FCw
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 8, 2024
கோவில் முகப்பில் இருந்த வாசல் கம்பியை இடித்து பஸ் நின்றதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக புது ரோடு, ரயில் நிலையம் சாலை ஆகிய பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்துக்குள்ளான பேருந்தையும் அங்கிருந்து அகற்றினர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவில் மீது அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது