கணவர் இறந்த துக்கத்தில் மகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

 
suicide

திருவள்ளூர் அருகே கணவர் இறந்ததால், மன உளைச்சலில் இருந்து வந்த  தாய் மகளுடன் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,

suicthiru

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருந்தன. விஜயகுமாருக்கு கடன் பிரச்சனை இருந்ததால், கடந்த 5 ஆண்டுகள் முன்பாக விஷ மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்த நிலையில், அவருடைய மனைவி நிரோஷா (வயது 30), அவருடைய மகள்களான தர்ஷினி (வயது 12), வினிதா (வயது 9) உடன் அவருக்கு சொந்தமான பூந்தோட்டத்தை பார்த்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார், கணவர் இறந்த துக்கத்திலிருந்து 5 ஆண்டுகளாக மீள முடியாமல் நிரோஷா தவித்து வந்ததாக கூறப்படுகிறது,

இந்நிலையில் நேற்று மாலை நிரோஷா தனது செல்போனில் தனது முதல் மகளான தர்ஷினியின் புகைப்படத்தை வைத்து i miss you  தர்ஷினி  எனவும் தனது மகளின் பள்ளி நோட்டுப் புத்தகத்தில் இருந்த  குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளியை கண்டு தான் பொங்கும் என வாக்கியத்தை வாட்ஸ்அப்  ஸ்டேட்டஸ்  வைத்துள்ளார். அதன் பிறகு வீட்டிலிருந்து தனது இரண்டாவது மகளான வினிதாவை  இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் அணைக்கட்டு பகுதிக்கு சென்று அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு  தங்கள் அணிந்திருந்த காலணிகளை கழற்றிவிட்டு கொசஸ்தலை ஆற்றில் மகளுடன் இறங்கி உள்ளார். பிறகு ஆர்ப்பரித்து ஓடும் கொசஸ்தலை ஆற்றின் உபரி நீர் அவர்களை அடித்து சென்றுள்ளது, இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வெங்கல் காவல் துறையினர், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் தாயையும், மகளையும் சடலத்துடன் மீட்டனர்.