ஹேமா கமிட்டி எதிரொலி... இன்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

 
தனுஷ், விஷால் விவகாரம்- இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழு கூட்டம் இன்று காலை  10 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. 

நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க 67-வது பொதுக்குழு கூட்டம் | south  indian actor association meeting - hindutamil.in

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர்  தலைமையில்  பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. துணைத் தலைவர்கள் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசிப்பு,தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு அறிக்கையை சமர்ப்பிப்பு, மேலும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும், எதிர்கால நலத்திட்டங்கள் ஆகியவற்றையும் சங்க உறுப்பினர்களுக்கு நிர்வாகிகள் விளக்க உள்ளனர். ஹேமா கமிட்டி எதிரொலியாக தமிழ் சினிமாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மிக முக்கியமாக சினிமா பணிகளை நிறுத்துவது குறித்த தயாரிப்பாளர் சங்க முடிவு, நடிகர் சங்கக் கட்டிட விவகாரம், நட்சத்திர கலைவிழா நடத்தி நிதிதிரட்டுதல் உள்ளிட்டவை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களாக உள்ள முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் மேடை நாடக கலைஞர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர்  பங்கேற்க உள்ளனர். மேலும் பொதுக்குழுவிற்கு வருகை தரும் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ முகாம் மற்றும் மதியம் அசைவ விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.