‘ஜி.டி.நாயுடு’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படத்தில் நடித்திருந்தார் மாதவன்.தற்போது மீண்டும் பயோபிக் ஒன்றில் நடித்துள்ளார்.இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மாதவன். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மறைந்த ஜி.டி.நாயுடு, எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.
இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் இயக்குகிறார். மாதவன் தயாரிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், பிரியாமணி, துஷாரா விஷயன், தம்பி ராமய்யா, வினய் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


