‘விடாமுயற்சி’ படத்தை ஜூலைக்குள் முடிக்க படக்குழு திட்டம்

 
விடாமுயற்சி

விடா முயற்சியின் இறுதி கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நாளை மறுநாள் ஜூன் 26ல் தொடங்குகிறது.

புத்தாண்டு தினத்திற்கு வெளியாகும் விடாமுயற்சி முதல் தோற்றம்

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமணி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் விடா முயற்சி. அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு  இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில்  தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சிறிய இடைவெளிக்காக படக்குழு  சென்னை திரும்பியது. அதற்கு இடையில் நடிகர் அஜித்குமாரின் 63வது திரைப்படமான குட் பேட் அக்லி  படத்தின் அறிவிப்பும் வெளியாகி அதற்கான முதற்கட்ட படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. 

சென்னை திரும்பியது விடாமுயற்சி படக்குழு

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் மீதமுள்ள  காட்சியை படமாக்க அஜித் உட்பட படக்குழுவினர் அஜர்பைஜான்  சென்றுள்ளனர். இதற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை மறுநாள் ஜூன் 26 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து ஜூலை இறுதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அர்ஜுன் ஜூலை இரண்டாம் தேதி அஜர்பை ஜானில் நடைபெறும் படப்பிடிப்பில் இணைய உள்ளார்.