அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

 
storm

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

RAW VIDEO: Rain Storm hits Riverside - YouTube

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இது மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகம் ஒட்டி நகரக்கூடும்  என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3.1 கி.மீட்டர் வரை நீலும் சுழற்சி மற்றும் அதன் தாக்கத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடல் பகுதிகள் இடையே வரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

ஒரே மாதத்தில் 3-வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழ்நாட்டில் நவம்பர் 24, 25,26 கன மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டிருந்தது.