இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடித்ததில் சிறுவனின் கண் பறிபோனது

 
crackers

இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடித்ததினால் 9 ஆம் வகுப்பு சிறுவனின் இடது கண் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊத்தங்கரை அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து; சுமார் ரூ.15 லட்சம்  மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம் | Fire accident in krishnagiri -  hindutamil.in

சென்னை ஜாபர்கான்பேட்டை பச்சையம்மன் தெருவை சேர்ந்தவர் அழகு சுந்தரம். இவர் புதுகோட்டையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு புவனேஷ்வரி(18) மற்றும் சந்தோஷ்(14) என இரு பிள்ளைகள் உள்ளனர். சந்தோஷ் மாநகராட்சி பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி சிறுவன் சந்தோஷ் பொருட்கள் வாங்க ஜாபர்கான் பேட்டை ஜான் கென்னடி தெரு வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த நேரத்தில் சிறுவன் கடந்து சென்ற போது சிதறிய கல் சிறுவனின் இடது கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக சிறுவன் சந்தோஷை மீட்டு எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தோஷ், அவரது இடது கண் பார்வையை இழந்துவிட்டதாக  தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் சகோதரி புவனேஷ்வரி தனது சகோதரர் கண் பறிபோனதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடட்திய போலீசார், ஜாபர்கான்பேட்டை ஜான்கென்னடி தெருவை சேர்ந்த விமலா(41) என்பவரின் இறுதி ஊர்வலத்தின் போது சண்முக வேல் என்பவர் நாட்டு வெடி வெடித்ததும், அந்த பட்டாசினால் தான் சிறுவனின் பார்வை பறிபோனது தெரியவந்தது. இதனையடுத்து  நாட்டு வெடி வாங்கியதாக ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த குணசேகரன்(24), பட்டாசு  வெடித்ததாக சண்முக வேல் மற்றும் சட்டவிரோதமாக நாட்டு வெடி விற்றதாக செல்வகுமார் ஆகிய 3 பேர் மீது வெடிபொருளை அஜாக்கிரதையாக கையாளுதல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுதல், மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.