தவெக மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு வீடு திரும்பிய நிர்வாகி உயிரிழப்பு
விழுப்புரத்தில் த.வெ.க மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு வீடு திரும்பிய புதுச்சேரி மாநில விஜய் நற்பனி இயக்க செயலாளர் சரவணன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், செய்தியாளர்கள் என வருகை புரியவரால் இன்று முதல் (21-10-24) தொடங்கி வருகின்ற 26ஆம் தேதி வரை மாநாட்டு திடலுக்குள் யாருக்கும் அனுமதி இல்லை என தடுப்புகள் அமைத்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் த.வெ.க மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு வீடு திரும்பிய புதுச்சேரி மாநில விஜய் நற்பனி இயக்க செயலாளர் சரவணன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று விக்கிரவாண்டி சென்று மாலை வீடு திரும்பியவர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். குடும்பத்தினர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்