அந்த எம்.எல்.ஏ. காரை பார்த்து அலறியடித்து ஓடிய மக்கள்

 
ம்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையினால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  அம்மாவட்டத்தில் செஞ்சி,  திண்டிவனம் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது . செஞ்சி பகுதியில் பெய்த கன மழையினால் செஞ்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு , பிரசவ வார்டு ஆகிய பகுதிகளில்  வெள்ள நீர் புகுந்ததில் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.  

அர்

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மருத்துவமனை நிர்வாகம்  அவசர நடவடிக்கை எடுத்திருக்கிறது.  மழைவெள்ளத்தினால் வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டதோடு அல்லாமல் அரசு மருத்துவமனையிலும் வெள்ள நீர் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சென்றார் திண்டிவனம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன்.

 திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட இடங்களான 1 வகாப் நகர், இந்திரா நகர் உள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.   மரக்காணம் சாலையில் இருக்கும் சாலையில் காரை நிறுத்திவிட்டு தெருக்கள் எங்கும் ஆறு போல் ஓடிக்கொண்டிருக்கும் மழை வெள்ளத்தினை பார்வையிட்டார்.  

இடுப்பளவு தண்ணீரில் சென்று அர்ஜுனனும் அவரது குழுவினரும் ஆய்வு நடத்தினர்.   அப்போது  சாலையில் நிறுத்தியிருந்த எம்எல்ஏ அர்ஜுனன் காரின் டயரில் ஒரு விஷப் பாம்பு ஒன்று ஏறியது.   இதை பார்த்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.  உடனே அப்பகுதி மக்கள்  பாம்பை அடித்து விரட்ட முற்பட்டனர். ஆனால் அந்த  பாம்பு வெளியேறவில்லை.  இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.  அவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னரும் பாம்பு வெளியேரவில்லை.

ர்ர்

பின்னர் வாட்டர் சர்வீஸ் நிலையத்திற்கு கார் எடுத்து செல்லப்பட்டு, அங்கு தீயணைப்பு படையினர்  4 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.   இதனால் சில மணி நேரம் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.