அந்த 5 கோடியும் அப்படியே பார்வதிக்கு கொடுக்கப்படும் - சூர்யா ரசிகர்களுக்கு பாமக நெத்தியடி

 
ப

 ஜெய்பீம் பட விவகாரத்தில் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பாமக சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  இதை அடுத்து பணம் பறிக்கும் பாமக என்று சூர்யா ரசிகர்கள் டுவிட்டரில் பரப்பி, டிரெண்ட் செய்து வருகின்றனர்.   இந்த நிலையில் அந்த இழப்பீடு தொகை அப்படியே பார்வதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பயன்படும் வகையில் கொடுக்கப்படும் என்று பாமக வழக்கறிஞர் பாலு பதிலளித்திருக்கிறார்.

ஜெய்பீம் படத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்திற்கு வைத்ததும்,  அந்த குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமாக அக்னி குண்டத்தை காட்டியதும் பாமகவினரை கொந்தளிக்க வைத்தது.

அ

வன்னிய சமூகத்தினரை அவமதிக்கின்ற வகையில்   காட்சி அமைத்து இருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி இருந்த நிலையில்,  படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது.   ஆனாலும்  மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ .குருவின் பெயர் திட்டமிட்டு படத்தில் அந்த போலீசுக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து ,  அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

  ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக நடிகர் சூர்யா 7 நாட்களுக்குள் ரூ.5 கோடி  நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள்மொழி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.  அந்த நோட்டீசில் வன்னியர்களின் மாண்புமிகு இலக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.  படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும்.  ஏழு நாட்களுக்குள் ஐந்து கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ப்

சூர்யா இதற்கெல்லாம் அஞ்சாமல் இருப்பதால்,  அவரது ரசிகர்கள் #WeStandWithSuriya என்ற  ஹேஷ்டேக்கினை  டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில்,  5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பதால் #பணம்பறிக்கும்_பாமக என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு ,  ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை தொடர்பாக அனுப்பப் பட்டிருக்கும் வழக்கறிஞர் நோட்டீசுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை.   வந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.   திரைப்படம் தொடர்பாக கேட்கப்பட்டிருக்கும் இழப்பீடு தொகை முழுவதும் இந்த விவகாரத்தில் உண்மையாக பாதிக்கப்பட்டிருக்கும் பார்வதி மற்றும் அவரது வாரிசுகள் பயன்பெறும் வகையில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.