தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 
school leave

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதனால் தமிழகத்திலுள்ள கடற்கரை ஓர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்ததன் காரணமாக தெரிவித்துள்ளது. 

Rain

தொடர்ந்து தமிழக முதலமைச்சர் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் , விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் காணொளி காட்சி வாயிலாக நேரடியாக பேசினார். அவர்களிடம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளீர்களா? என கேட்டு அவர்களுக்கு சரியான யோசனைகளையும் முதலமைச்சர் கூறினார். அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். வானிலை ஆய்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.